
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபெருமானின் இளையபிள்ளை முருகன். இப்பெருமானுக்கு 'குறிஞ்சிக்கிழவன்' 'தமிழ்க்கிழவன்' என்றெல்லாம் பெயர்கள் உண்டு. கிழவன் என்றால் 'உரிமை கொண்டவன் அல்லது தலைவன்' என்று பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக்கிழவன் என்றும் பெயர் பெற்றார். முருகனுக்குரிய தலங்கள் எல்லாமே மலை மீதே அமைந்திருக்கும்.அதனால் குன்றிருக்கு மிடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற சொல்லும் வழக்கமும் உருவானது.

