ADDED : ஜூலை 09, 2012 10:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவிச்சக்கரவர்த்தி கம்பர் சரஸ்வதி அந்தாதி பாடி கலைமகள் அருள் பெற்றார். குமரகுருபரர், சரஸ்வதியைக் குறித்து, சகலகலாவல்லி மாலை பாடி இந்தி மொழி பேசக் கற்றுக் கொண்டார். பாரதியார் சரஸ்வதியின் பெருமையைக் குறித்து எழுதிய பாடல்கள் புகழ் மிக்கவை. வடக்கே உள்ள புலவர்களில், காளிதாசர் காளியருளால் கவிபாடும் திறம்பெற்று 'பஞ்ச காவ்யா' என்னும் ஐந்து காவியங்களை எழுதினார். ராமகிருஷ்ண பரமஹம்சர், தட்சிணேஸ்வரம் காளியோடு நேரில் பேசிப் பழகும் பேறு பெற்றிருந்தார்.

