/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
ராமாயணம்
/
எல்லோரையும் ஈர்த்த ராமாயணம்
/
எல்லோரையும் ஈர்த்த ராமாயணம்
ADDED : ஜன 26, 2024 07:01 AM

* மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் ஒருவர் தமிழகம் வந்தார். இங்கு எந்தளவு ராமாயணம் பரவியுள்ளது என்பதை அறிய ஆசை. தற்செயலாக கிராமம் ஒன்றிற்கு சென்றார். அப்போது அங்கு அவர் கண்ட காட்சி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரசவ வேதனையால் அவதிப்படும் ஒரு ஹிந்து பெண்ணுக்கு முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ராம கதை சொல்லி மனோபலம் ஊட்டுவதை கண்டார். இந்த நிகழ்வினை மாராட்டிய பத்திரிகையில் எழுதி ராமாயணத்தின் புகழினை மேலும் பரப்பினார். * நீதிபதி மு.மு.இஸ்மாயில் ராமாயண சொற்பொழிவாளர். இவரின் பக்திப்பணியை பாராட்டி ஆசி வழங்கியுள்ளார் காஞ்சி மஹாபெரியவர்.* பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் டில்லியில் ஆசிய ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற உதவி செய்துள்ளனர்.

