
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* யாரையும் ஏளனம் செய்யாதே. உன்னை நீயே உற்று நோக்கினால் உன்னிடமுள்ள மடமையைக் கண்டு சிரிக்க நேரிடும்.
* உன்னுடைய நம்பிக்கையை அறிவென்று எண்ணுவது தவறில்லை. ஆனால், பிறர் நம்பிக்கையை மிதிக்காதே.
* எந்தச் செயலையும் இறை உணர்வோடு செய். அப்போது அதுவும் ஒரு தியானமாவதை உணர்வாய்.
* அமைதி தான் எல்லாமே. அதில் ஞானம், வலிமை, ஆனந்தம் என அனைத்தும் அடங்கியிருக்கின்றன.
* மனதில் அமைதி நிலைத்திருந்தால், அகவாழ்விலும், புறவாழ்விலும் சமரசம் நிறைந்திருக்கும்.
- அரவிந்தர்