ADDED : ஏப் 26, 2024 02:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முஸ்லிம்களின் எதிரிகளான குரைஷிகள் மெதீனாவிற்கு படை எடுத்தனர். நகருக்குள் நுழைவதற்கு முன் அதற்கு அருகே இரண்டு மைல் துாரமுள்ள 'உஹத்' குன்றின் அடிவாரத்தில் கூடாரம் அமைத்தனர்.
ஹிஜ்ரீ மூன்றாவது வருடம் ஷவ்வால் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகை முடிந்தது. நபிகள் நாயகம் ஆயிரம் தோழர்களுடன் மெதீனா நகரை விட்டு கிளம்பினார். அந்த ஆயிரம் பேர்களில் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவரது முந்நுாறு பேர்களும் அடக்கம். சிறிது துாரம் சென்றதும் 'நாயகம் தன் அபிப்பிராயப்படி நடக்கவில்லை' என்று கூறி தன் படையுடன் திரும்பினார் அப்துல்லாஹ் இப்னு. மீதியிருந்த எழுநுாறு வீரர்களில் நுாறு பேர் மட்டுமே கவசம் அணிந்திருந்தனர். இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் முன்னோக்கி சென்றார்.