sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தைய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1060

இனி இதுக்கு மேல வேற பேச்சே இல்ல: பாஜ உறுதி | BJP | Lok Shaba Speaker

வீடியோ: அரசியல்

13-Jun-2024

அசுவினி:  ரத்தக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக்காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதத்தில் நட்சத்திரநாதன் 6ல் சஞ்சரிப்பதுடன் குருவின் பார்வையும் அங்கே பதிவதால் பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நோய்கள் நீங்கும். வியாபாரம் தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும் வாரத்தின் முற்பகுதியில் சனி வக்ரமடைவதால் தொழிலில் அக்கறை செலுத்துவது அவசியம். தன ஸ்தான குருவால் வருமானம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்ய முடியும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் உயரும். தொழில் விருத்தியாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அஷ்டம, ஜீவன ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சிலருக்கு  சொத்து சேர்க்கை, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 20, 21.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16,18,25,27, ஜூலை 7,9,16பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்வு வளமாகும்.பரணி : அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், தைரியக்காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றியாகும். அரசுவழி செயல்கள் ஆதாயம் தரும். இதுவரையில் சங்கடத்திற்கு ஆளாகி வந்த நிலை இனி மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு வந்து சேரும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். விவசாயிகளுக்கு இதுவரை இந்த நெருக்கடி குறையும். பணியாளர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். சந்திராஷ்டமம்: ஜூன் 21, 22. அதிஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27, ஜூலை 6, 9, 15.பரிகாரம்: காளியை வழிபட தொல்லை விலகும். நன்மை உண்டாகும்.கார்த்திகை:  1 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியன், வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவராக இருப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் நட்சத்திரநாதன் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகி நன்மை அதிகரிக்கும். நினைத்ததை எல்லாம் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி, சங்கடம் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைக்குரிய அனுமதி கடிதம் வரும். சனியின் பார்வை ராசி, அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால் பல சங்கடங்களை சந்திக்கும் நிலையில் ஜூன் 19 முதல் சனி வக்கிரம் அடைவதால் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு மேம்படும். 6ம் இடத்திற்கு குருபகவானின் பார்வையும், அங்கே கேதுவும் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகளின் விளைபொருளுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும். பொன், பொருள் சேரும் சந்திராஷ்டமம்: ஜூன் 22 அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 19, 27, 28, ஜூலை 1, 9, 10பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட அதிர்ஷ்டம் உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் சக்தி எப்போதும் இருக்கும். பிறக்கும் ஆனி மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் ராசிநாதன் தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலகி பணவரவு அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும். ஜீவனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஜூன் 19 முதல் வக்ரமடைவதால் தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குலதெய்வ அருள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தி அடையும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். அந்நியரின் உதவி அதிகரிக்கும். குருவின் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சந்திராஷ்டமம்: ஜூன் 26.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28 ஜூலை 1, 6, 10, 15பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.ரோகிணி : களத்திரக்காரகனான சுக்கிரன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் உழைப்பால் வெற்றி பெறுபவராக இருப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. இதுவரை உத்தியோகத்தில் நீங்கள் சந்தித்து வந்த நெருக்கடிகள் ஜூன் 19 முதல் விலகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் நிலை உயரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவரின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும். லாப ராகுவால் வருவாய் உயரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கலைஞர்கள் முயற்சி நிறைவேறும். விவசாயிகள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 23, 24.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 20, 29, ஜூலை. 2, 6, 11, 15பரிகாரம்: நடராஜரை வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் : அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு செயல்களில் வேகமும் சாதிப்பதில் திறமையும் இருக்கும். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு யோகமான மாதம். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 2ம் இடத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். லாப ஸ்தான ராகுவால் நீங்கள்  நினைப்பதையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும். 7 ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகி லாபம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு நன்மை தரும். கமிஷன் ஏஜன்சி லாபம் தரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் வக்ரம் அடைவதால் அரசு அலுவலர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். அலுவலக பிரச்னைகள்  முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: ஜூன் 24, 25அதிர்ஷட நாள்: ஜூன் 15, 18, 27, ஜூலை 6, 9, 15.பரிகாரம்: துர்கையை வணங்கினால் சங்கடம் விலகும்.

மிருகசீரிடம் 3, 4 : வித்யா காரகனான புதன், ரத்தக் காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு வெற்றி பெறும் திறமை இருக்கும். பிறக்கும் ஆனி மாதம் உங்கள் நிலையில் முன்னேற்றங்களை உண்டாக்கும் மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரன் பொருளாதார நெருக்கடிகளை நீக்குவார். பொன், பொருள் சேர்க்கையை அதிகரிப்பார். எதிர்பார்த்த வரவை வழங்குவார். குடும்பத்திலும் நிம்மதியான நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் படபடப்பு, டென்ஷன் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசு விவகாரங்கள் தள்ளிப் போகும் என்றாலும் லாப ஸ்தானத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். விவசாயிகளின் விருப்பங்கள் பூர்த்தியாகும். ரியல் எஸ்டேட், கெமிக்கல், பில்டர்ஸ், ஓட்டல், பிரிக்ஸ் தொழில் புரிவோருக்கு லாபம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் சாதகமாகும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். ஆரோக்கியம் சீராகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நெருக்கடி ஏற்படாமல் போகும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 25அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்.திருவாதிரை: யோகக்காரகன் ராகு, கல்விக்காரகன் புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அறிவாற்றலும் அதிர்ஷ்டமும் இயல்பாகவே இருக்கும். பிறக்கும் ஆனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்க, ராசிநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிக்கிறார் என்பதால் எந்த ஒரு செயலையும் யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். மற்றவரால் சாதிக்க முடியாத காரியங்களையும் இப்போது உங்களால் சாதிக்க முடியும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இழுபறியாக இருந்த வரவு வந்து சேரும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சனிபகவான் வக்ரமடைவதால் செயல்களின் நிதானம் அவசியம். குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் சந்தோஷத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும்.  செல்வாக்கு உயரும். பணியாளர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 25, 26.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 23, ஜூலை 4, 5, 13, 14.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட நன்மை அதிகரிக்கும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: ஞானக்காரகன் குரு, வித்யா காரகன் புதன் அம்சத்தில் பிறந்து அறிவாற்றலால் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி புதிய பாதையைக் காட்டும். உங்கள் நட்சத்திரநாதன் குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் உங்களுக்கு யோகத்தை வழங்க இருக்கிறது. இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்களை விலக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது கிடைக்கும். உடல்நிலை சீராகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். போட்டியாளர்கள் உங்களிடம் சரணடைவார்கள். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்ரம் அடைந்தாலும் குருவின் பார்வைகளால் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் வருமானம் பல வகையிலும் வரும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களின் மேற்கல்வி முயற்சி நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30, ஜூலை 3, 5, 12, 14பரிகாரம்: குருபகவானை வியாழனன்று வழிபட வாழ்வு வளமாகும்.

புனர்பூசம் 4 ம் பாதம் : மனக்காரகனான சந்திரன், தனக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமூகத்தில்  தனி அந்தஸ்தும், மரியாதையும், செல்வாக்கும் இருக்கும். பிறக்கும் ஆனி மாதத்தை உங்களுக்கு அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்லவேண்டும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். பணவரவை அதிகரிப்பார். பிள்ளைகளின் வழியில் நன்மைகளை அதிகரிப்பார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் கனவை நனவாக்குவார். திருமண வயதினருக்கு தகுதியான வரனை அமைத்துத் தருவார். உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். இதுவரை உத்தியோகம், தொழிலில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் இரட்டிப்பாகும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை பயமுறுத்தி வந்த சனி ஜூன் 19 முதல் வக்ரமடைவதால் உடல்நிலை சீராகும். ஆயுள் மீதான பயம் போகும். பெரிய அளவில் உங்களை பயமுறுத்தி வந்த நோய்களும், மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படும். குடும்பத்தில் தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விவசாயிகள் முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும்.சந்திராஷ்டமம்: ஜூன் 27அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 21, 29, 30, ஜூலை 2, 3, 11, 12பரிகாரம்: அண்ணாமலையாரை தினமும் வழிபட வாழ்வு வளமாகும்.பூசம் : ஆயுள்காரகனான  சனி, மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தெளிவுடன், திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் எப்போதும் வெற்றி உண்டாகும். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து அச்சத்தை உண்டாக்கிய சனி மாதத்தின் முதல் வாரத்தில் வக்ரம் அடைவதால் இதுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் ஆதாய நிலை உண்டாகும். மற்றவர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயர்ந்து தெளிவுடன் செயல்படுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் செயல்கள் யாவும் லாபமாகும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். குருவின் பார்வையும் 3ம் இடத்திற்கு உண்டாவதால் லாபம் பல மடங்காகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். வரவேண்டிய பணம் வசூல் ஆகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 27, 28அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29, ஜூலை 2, 8, 11பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சங்கடம் விலகும்.ஆயில்யம்: கல்விக்காரகன் புதன், சிந்தனைக்காரகன் சந்திரன் அம்சத்தில் பிறந்து கல்வி கேள்விகளில்  முதலிடம் வகிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை அள்ளி வழங்கும் மாதம். மாதம் முழுவதும் உங்கள் லாபாதிபதியின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இதுவரையில் உங்கள் வாழ்வில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். அந்தஸ்து உயரும். மழலை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: ஜூன் 28, 29அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, ஜூலை 2, 5, 11பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

மகம்: ஞான மோட்சக் காரகனான கேது, ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள் அனைத்திலும் மேன்மை மிக்கவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். 7ம் இடத்தில் சஞ்சரித்து சங்கடங்களை வழங்கிய சனி, ஜூன் 19 ல் வக்ரமடைவதால் உங்கள் நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். குருவின் பார்வை 2, 4, 6ம் இடங்களில் பதிவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். மனதில் சந்தோஷம் நிறையும். எதிர்ப்புகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். கடந்த கால சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் தங்கள் செயலில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.சந்திராஷ்டமம்: ஜூன் 29, 30அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 19, 25, 28. ஜூலை 1, 7, 10பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் நன்மை கூடும். பூரம்: ஒளிக்காரகனான சூரியன், அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்ற மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் நன்மை வழங்க இருப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். பணம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வையால் குடும்பத்தில் இருந்து நெருக்கடிகள் விலகி ஒற்றுமை உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரி தொல்லைகள் விலக ஆரம்பிக்கும் இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். 7 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்ரமடைவதால் உங்களுக்குண்டான நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் லாபத்தை அடையலாம். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடங்கள் மறையும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் மேற்படிப்பு கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 1அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28. ஜூலை 6, 10, 15பரிகாரம்: சனிக்கிழமையில் நவக்கிரகத்தை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்திலும் ராசியிலும் பிறந்து, சக்தி மிக்கவராக விளங்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். அரசு வழியிலான முயற்சி ஆதாயம் தரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். அந்நியரால் சங்கடம் தோன்றும் என்றாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரித்தாலும் குருவின் பார்வை பதிவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு இம்மாதம் யோகமான மாதமாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். 7 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்ரமடைவதால் நிம்மதியான நிலை ஏற்படும். புதிய முயற்சிகளில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.சந்திராஷ்டமம்: ஜூன் 2அதிர்ஷ்ட நாள்: 19, 28, ஜூலை 10பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டால் நன்மை சேரும்.

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: வித்யா காரகனான புதன், ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்து விவேகமுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டம் தரும். உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அனுமதி கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் புதனால் புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பின் காரணமாக செய்யும் தொழில் அபிவிருத்தியாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நீண்ட நாளாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் விருப்பம் நிறைவேறும். உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி எண்ணம் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 2அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 23, 28, ஜூலை 1, 5, 10, 14பரிகாரம்: வீரபத்திரரை வழிபட மனதில் தைரியம் வளரும். அஸ்தம்: மனக்காரகனான சந்திரன், கல்விக் காரகனான புதன் அம்சத்தில் பிறந்து திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் விருப்பம் நிறைவேறும் மாதமாக இருக்கும். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் உங்கள் செல்வாக்கு உயரும். அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். குலதெய்வ அருளும், இஷ்ட தெய்வ அருளும் வேண்டுதல்களை நிறைவேற்றும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், புதனும் உங்கள் வாழ்க்கையில் புதிய  நம்பிக்கையை உண்டாக்குவார்கள். அரசு வழி முயற்சிகள் ஆதாயத்தை வழங்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். செய்யும் தொழிலில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதியருக்குள் இருந்த சங்கடங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். கல்வியாளர்களின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரம் ஏற்படும் என்றாலும், விடாமுயற்சியால் அதை சரி செய்வீர்கள்.சந்திராஷ்டமம்: ஜூலை 3அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29, ஜூலை 2, 5, 11, 14பரிகாரம்: கோதண்ட ராமரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். சித்திரை 1, 2 ம் பாதம்: தைரிய காரகன் செவ்வாய், புத்தி காரகன் புதன் அம்சத்தில் பிறந்து சாதுரியமாக செயல்படும் உங்களுக்கு ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வருவாயை அதிகரிப்பார். அரசு அலுவலர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். நேற்று வரை இருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உங்கள் அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். பொன் பொருள் சேர்க்கையை வழங்குவார். இந்த நேரத்தில் ராஜ கிரகமான சூரியனும் உங்கள் ராசிநாதனும் சாதகமாக இருப்பதால் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். கல்வியாளர்கள், கல்வி நிறுவனம் நடத்துவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். தம்பதியருக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 4அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14பரிகாரம்: கள்ளழகரை வழிபட்டால் சங்கடம் அனைத்தும் விலகும்.

சித்திரை 3, 4 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த நீங்கள்  நினைத்ததை சாதிப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றத்தை உண்டாக்கும். ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். தெய்வ அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். குருவின் பார்வைகள் விரய, தன, சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் சுபச்செலவு அதிகரிக்கும். சிலர் சொந்த வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வர். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உங்கள் மனதில் இருந்த சங்கடம் நீங்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆரோக்கியம் ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதின் வழியாக நன்மை காணலாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி ஜூன்19 முதல் வக்ரம் அடைவதால் பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். தம்பதியர் பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 4அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27, ஜூலை 6, 9, 15பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடங்கள் விலகும்.சுவாதி: யோகக்காரகன் ராகு, அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதும், ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் யோகம் அளிக்கும். கடந்த கால நெருக்கடி மறையும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். விற்பனையாகாமல் தேங்கிய பொருட்கள் நல்ல விலைக்கு செல்லும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும். தெய்வ அருள் உண்டாவதுடன் வேண்டுதல்களையும் நிறைவேற்றுவீர்கள். வருமானம் பல வழியில் வரும்.  பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். உங்கள் மனதை வாட்டிய பிரச்னை விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இருந்த சங்கடங்கள் நீங்கும். பெரியோருடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 5அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 22, 24, ஜூலை 4, 6, 13, 15பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும். விசாகம் 1, 2, 3 ம் பாதம்: களத்திரக்காரகனான சுக்கிரன், ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திருப்புமுனையான மாதமாக இருக்கும். யோகக்காரகன் ராகுவால் நீங்கள் நினைத்தது நடந்தேறும். மேலைநாட்டு தொடர்பு ஆதாயத்தை உண்டாக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். விற்பனை உயரும். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் இருந்த பயம் நீங்கும். உங்கள் முதலீடு லாபத்தை ஏற்படுத்தும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். செய்யும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பாக்கிய ஸ்தான சுக்கிரனால் பொருளாதாரம் உயரும். புதிய பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். குருபார்வை விரய ஸ்தானத்திற்கு உண்டாவதால் புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சேமிப்பு உயரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 6அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30, ஜூலை 3, 12, 15பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும்.

விசாகம் 4 ம் பாதம்: தனக்காரகனான குரு, தைரியகாரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதத்தை அதிர்ஷ்ட மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்க்கையில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். இதுவரை இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு விருப்பம் பூர்த்தியாகும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்காலத்திற்குரிய பாதை தெரியும். நோயால் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு ஜூன் 19 முதல் நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி அனுகூலமாகும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் எல்லாம் வெற்றி ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 6அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 21, 27, 30, ஜூலை 3, 9, 12பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வு வளமாகும்.அனுஷம் : வீரிய காரகனான செவ்வாய், கர்மக் காரகனான சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதம் யோகமான மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். எதிர்ப்புகள் மறையும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் காணாமல் போகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் நட்சத்திரநாதன் சனி ஜூன் 19 முதல் வக்கிரம் அடைவதால் உங்கள் சந்தோஷத்திற்கு ஏற்பட்ட தடைகள் விலகும். நினைத்ததை இனி சாதிப்பீர்கள். விருப்பம் பூர்த்தியாகும். குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய அளவிற்கு முன்னேற்றம் காண்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய வழிகளை உருவாக்குவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 7அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27, ஜூலை 8, 9பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை பன்மடங்கு உயரும். கேட்டை: ரத்தக்காரகன், யுத்தக்காரகனான செவ்வாய், வித்யாகாரகனான புதன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ஆனி மாதம் திருப்புமுனை மாதமாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாயும், நட்சத்திரநாதன் புதனும் இந்த மாதத்தில் உங்களுக்கு முன்னேற்றத்தை வழங்க இருக்கிறார்கள். குருபகவானின் பார்வையும் கூடுதலாக நன்மைகளை வழங்கப் போகிறது. சப்தம குருவால் இனி உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். உங்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். புதியபாதை தெரியும். தம்பதியரிடையே இருந்த சங்கடம் விலகும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். சனி பார்வையால் சங்கடப்பட்டு வந்த நிலை இனி மாறும். ஜூன் 19 முதல் சனி வக்ரமடைவதால் நோய்களில் இருந்து முழுமையாக மீண்டு வருவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பண நெருக்கடி விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். பொன், பொருள் சேரும். மற்றவர்களால் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 8அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14பரிகாரம்: சங்கர நாராயணனை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.

மூலம்: ஞான மோட்சக்காரகனான கேது, ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் எப்படி இருக்கப்போகிறது? உங்கள் ராசிநாதனின் பார்வைகள் 10, 12, 2 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வீடு, இடம் வாங்குவதற்காக செலவு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வரவு அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் 6 ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடலை வாட்டும் நோய்கள் விலகும். நம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி  ஜூன் 19 முதல் வக்கிரம் அடைவதால் இதுவரை அவர் வழங்கிய நற்பலன்களை இனி அவரால் வழங்க முடியாமல் போகலாம். முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதை அலைபாய விடாமல் எதிர்காலத்தை நினைத்து செயல்படுவதால் சங்கடங்கள் விலகும். சந்திராஷ்டமம்: ஜூலை 9, 10.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 21, 25, 30, ஜூலை 3, 7, 12பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.பூராடம்: அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன், தனக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மனதிற்கினிய மாதமாக அமையும். சுக ஸ்தானத்தில் ராகு, ஏழாம் இடத்தில் சுக்கிரன் என்ற நிலையால் மனதில் தடுமாற்றம் தோன்றும். சிலருக்கு காதல் அரும்பும் என்பதால் எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குருவின் பார்வை குடும்ப நிலையைப் பாதுகாக்கும். எதிர்பார்த்த பணவரவை வழங்கும். செய்யும் தொழிலில் லாபத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகளை அடைய வைக்கும். சப்தம சூரியனால் ஒரு சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும். எந்த ஒன்றிலும் குழப்பத்திற்கு ஆளாகாமல் செயல்பட்டால் நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். ஜூன் 19 முதல் சனி வக்கிரம் அடைவதால் இதுவரையில் எளிதாக நிறைவேறிவந்த முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி 6ல் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலை மனநிலை சீராகும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம், தொழில் விருத்தியாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.சந்திராஷ்டமம்: ஜூலை 10, 11அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30, ஜூலை 3, 6, 12, 15பரிகாரம்: வராகியம்மனை வழிபடுவதால் சங்கடங்கள் விலகும்.உத்திராடம் 1 ம் பாதம்: ஆத்மகாரகனான சூரியன், புத்திரகாரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி  திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். உங்கள் ராசிநாதன் 6 ல் சஞ்சரிப்பதுடன், 3ல் சஞ்சரித்து உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்கி வரும். சனி ஜூன் 19 முதல் வக்கிரம் அடைவதால் உங்கள் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை எளிதாக நடந்த வேலைகள் எல்லாம் இனி உங்கள் முயற்சிக்கேற்ப நடந்தேறும். குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு பதிவதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். சிலர் புதிய சொத்து, வாகனம் வாங்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தன ஸ்தானத்திற்கு குருவின் பார்வை பதிவதால் வரவு அதிகரிக்கும். எதிர்வரும் செலவுகளை உங்களால் சமாளிக்க முடியும். எத்தனை பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும். நெருக்கடி நீங்கும். புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பதுடன், மற்றவரை நம்பி எந்த ஒரு செயலையும் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 11அதிர்ஷ்ட நாள்: 19, 21, 28, 30, ஜூலை 1, 3, 10, 12பரிகாரம்: காலையில் சூரியனை வழிபட வாழ்க்கை சுபிட்சமாகும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்: ஆத்மகாரகனான சூரியன், ஆயுள் காரகனான சனி அம்சத்தில் பிறந்து உண்மையைப்பேசி வாழும் உங்களுக்கு பிறக்கும் ஆனி அதிர்ஷ்ட மாதமாக இருக்கும்.  நட்சத்திரநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தொழில், வியாபாரம் லாபம் அடையும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும். புதிய தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேரும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் செயல்கள் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். திருமண வயதினருக்கு வரன் வரும். குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். நினைத்ததை சாதிக்கும் மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 12அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 19, 26, 28, ஜூலை 8, 10பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டாகும்.திருவோணம்: உடல்காரகனான சந்திரன், ஆயுள்காரகனான சனி அம்சத்தில் பிறந்து விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழும் உங்களுக்கு ஆனி மாதம் யோகமானதாக அமையும். 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையெல்லாம் வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைத்து மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடிக்க வைப்பார். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அரசு வழியில் ஆதாயத்தை உண்டாக்குவார். சட்ட சிக்கல்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். எதிரி பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். வம்பு வழக்குகளில் உங்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவார்.  நோய் நொடி விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால்  செல்வாக்கு, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 12, 13அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29, ஜூலை 2, 8, 11பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.  அவிட்டம் 1, 2 ம் பாதம்: கர்மக்காரகனான சனி,  தைரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றாலும், 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதனும், 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவின் சஞ்சாரமும் அவருடைய பார்வைகளும் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை இப்போது உண்டாக்கும். இந்த நேரத்தில் ஜூன் மாதம் 19 ம் தேதி தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைவதால் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி, உடல் பாதிப்புகள் முழுமையாக விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். முயற்சி யாவும் வெற்றியாகும். புதிய சொத்து சேரும். மாணவர்களின் கனவு நனவாகும். தம்பதியருக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். எல்லா வகையிலும் உங்கள் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: ஜூன் 15, ஜூலை 13,14அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27, ஜூலை 8, 9பரிகாரம்: அனுமனை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4 ம் பாதம்: தொழில்காரகனான சனி,  சகோதரகாரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்து, எதையும் சாதிக்கும் திறன் பெற்ற உங்களுக்கு பிறக்கும் ஆனி நன்மையான மாதமாகும். உங்கள் நட்சத்திரநாதன் மூன்றாம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி ஜூன் 19 முதல் வக்கிரமடைவதால் நெருக்கடிகள் விலகும். கூட்டுத்தொழில் லாபமடையும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். குருபகவானின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த நோய்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வாகனம் ஆகுவது என செலவு அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 16, ஜூலை 13, 14அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 25, 27, ஜூலை 8, 9பரிகாரம்: நவக்கிரகத்தில் சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.சதயம்: யோகக்காரகனான ராகு, கர்மக்காரகனான சனி ஆதிக்கத்தில் பிறந்து சாமர்த்தியமாக செயல்பட்டு சாதனை புரியும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் திருப்புமுனையாக அமையும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்த சனி ஜூன் 19 முதல் வக்கிரமடைவதால் இதுவரை இருந்த நெருக்கடி குறையும். வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கை மறைக்க நினைத்தவர்களின் செயல் பலிக்காமல் போகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பூமி, இடம் சம்பந்தப்பட்ட விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். சிலர் புதிய வீடு கட்டுவீர்கள். கடந்த கால நெருக்கடி விலகும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களின் கனவு நனவாகும். கூட்டுத்தொழில் இனி லாபத்தை நோக்கிச் செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 16, 17, ஜூலை 14, 15அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 26, ஜூலை 4, 8, 13பரிகாரம்: துர்கையை வழிபட அமோக லாபம் பெருகும். பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: தனக்காரகனான குரு, தொழில்காரகனான சனி அம்சத்தில் பிறந்து தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் உங்களுக்கு பிறக்கும் ஆனியில் நெருக்கடிகள் விலகும். ஜென்ம ராசிக்குள் சனி, 2 ல் ராகு, 8 ல் கேது, 4 ல் குரு என கிரகங்கள் நெருக்கடி ஏற்படுத்தி வரும் நிலையில், 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் முயற்சிகளை வெற்றியாக்குவார். செயல்களை லாபமாக்குவார். வருவாயை அதிகரிப்பார். 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் எதிர்பார்த்த பணவரவை கொண்டு வந்து சேர்ப்பார். பொன், பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். ஜூன் 19 முதல் சனி வக்கிரம் அடைவதால் அவரால் உண்டான சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். குருவின் பார்வைகள் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானத்திற்கு உண்டாவதால் உங்கள் உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். செல்வாக்கு வெளிப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்து, வாகனம் என விருப்பம் நிறைவேறும். சமூகத்தில்  அந்தஸ்து உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசு வழியிலான முயற்சியில் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்பு விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18, ஜூலை 15, 16அதிர்ஷ்ட நாள்: ஜூன் 26, 30, ஜூலை 3, 8, 12பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட்டால் தடையனைத்தும் விலகும்.

பூரட்டாதி 4 ம் பாதம்: குருவின் அம்சத்தில் பிறந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனிமாதம் நம்பிக்கையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் மறைவு பெற்றாலும் அவருடைய பார்வைகள் சப்தம, பாக்ய, லாப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தெய்வ அனுகூலம் ஏற்படும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன்கள் அடைபடும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைவதால் செலவுகள் கட்டுக்குள் வரும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் லாபம் சேரும்.  மாதத்தின் பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் முயற்சி யாவும் வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபத்தை உண்டாக்கும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்கு வாய்ப்புண்டாகும். மனதில் இருந்த சங்கடங்கள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 18, ஜூலை 16அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 30, ஜூலை 3, 12பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட வாழ்வு சிறக்கும். உத்திரட்டாதி: கர்மக்காரகனான சனி, ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்து விருப்பப்பட்டபடி வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் புதிய பாதையைக் காணும் மாதமாக இருக்கும். இதுவரையில் இருந்த சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் நட்சத்திரநாதன் ஜூன் 19 முதல் வக்கிரமடைவதால் உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். நிம்மதியாக உறங்க முடியும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். தெய்வ அருள் உண்டாகும். விரயச் செலவுகள் கட்டுப்படும். குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்கும் நிலை ஏற்படும். உங்கள் ராசிநாதன் பார்வைகளால் வரவு அதிகரிக்கும். நட்பின் வழியே நன்மை ஏற்படும். தடைபட்டிருந்த பணம் இப்போது வரும். பெரியவர்களின் ஆசீர்வாதம் உண்டாகும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 18, 19, ஜூலை 16அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30, ஜூலை 3, 8, 12பரிகாரம்: காமாட்சியம்மனை வழிபட முயற்சி வெற்றியாகும்.ரேவதி: வித்யா காரகனான புதன், ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் உங்களுக்கு பிறக்கும் ஆனிமாதம் யோக மாதமாக இருக்கும். 4 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதனால் மனம் தெளிவாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். இதுவரை ஏற்பட்ட படிப்பினைகளை வைத்து முன்னேற்றத்திற்கு வழிகாண்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் ராசிநாதனின் பார்வைகளும் உங்களுக்கு யோகத்தை உண்டாக்கப் போகிறது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் அனுகூலம், ஆதாயம் ஏற்படும். பெரியோரின் ஆதரவு உங்கள் சங்கடங்களைப் போக்கும். பணம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். தொழில், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 11 ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் புதிய நண்பரகள் உண்டாவார்கள். அவர்களால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார் என்பதால் நியாயமான செயல்களில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைவதால் செலவு கட்டுக்குள் வரும். பணநெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன். 19, 20அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30, ஜூலை 3, 5, 12, 14பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபட செல்வம் பெருகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement


    • Dinamalar Events


    Dinamalar