மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்!
ADDED : 175 days ago
நடிகர் சிரஞ்சீவியின் 158வது படத்தை கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை 'வால்டர் வீரையா' படத்தை இயக்கிய பாபி கொல்லி இயக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என தகவல் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவில்லை தமன் தான் இசையமைக்கவுள்ளார் என உறுதியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். சிரஞ்சீவியின் 'காட்பாதர்' படத்திற்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவி - தமன் கூட்டணி இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.