வாசகர்கள் கருத்துகள் (1)
மிருகம் அருமையான சமூக விழிப்புணர்வு படம்... ஆனால் அந்த படத்திற்கு விருது வழங்கவில்லை.
தெலுங்கு நடிகர் ஆதி தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அரவான், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும், 2007ம் ஆண்டில் சாமி இயக்கத்தில் வெளிவந்த 'மிருகம்' படத்தில் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் தான் பேசப்பட்டார். அந்த படத்தில் கடுமையான உழைப்பை தந்து நடித்திருப்பார்.
சமீபத்தில் ஆதி அளித்த பேட்டியில் மிருகம் படத்தை குறித்து கூறியதாவது, மிருகம் படம் முதல் பாதியை படமாக்கி வரும் போது உடல் எடையை கூட்டி நடித்தேன். சமோசா மாதிரி கிடைக்குறது எல்லாம் சாப்பிடுவேன். ஆனால்,இரண்டாம் பாதிக்காக உடல் எடையை 3 மாதத்தில் குறைத்து ஆக வேண்டிய கட்டாயம். கஷ்டப்பட்டு குறைத்தேன். அதன்பிறகு சாப்பிட முடியாமல் கை நடுங்கும் அவ்வளவு பலவீனமாக இருந்தேன். அந்த படத்துக்கு அந்த உழைப்பு தேவைப்பட்டது, செய்தேன் என்றார்.
மிருகம் அருமையான சமூக விழிப்புணர்வு படம்... ஆனால் அந்த படத்திற்கு விருது வழங்கவில்லை.