உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி

மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி


நடிகை சுஹாசினி மணிரத்னம், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் செலெக்ட்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2023ல் மலையாளத்தில் வெளியான 'பூக்காலம்' என்கிற படத்தில் நடித்த அவர், தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு 'அஞ்சாம் பிரமாணம்' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சைக்காலஜிக்கல் திரில்லராக 1980களில் பின்னணியில் ஒரு கட்டுப்பாடான கிறிஸ்துவ குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா பூஜையுடன் கொடுங்கல்லூரில் துவங்கியது. ஹிந்தியில் மறைந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த 'பேச்சாரா' படத்தில் அறிமுகமான நடிகை நிமிஷா இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரை உலகில் அடி எடுத்து வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !