உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன்

மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன்


'தெய்வத்திருமகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம் நாயகியாக, ஐஸ்வர்யா ராயின் இளமை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக ஹிந்தியில் வெளியான 'துரந்தர்' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தற்போது இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக மாறியுள்ளார்.

துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இரண்டு படங்களுமே ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றுள்ளார். இதை தொடர்ந்து ஹிந்தியில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது உஜ்ஜைனில் உள்ள மகா காலேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சாரா அர்ஜூன். அதிகாலையில் நடைபெற்ற புனித பஸ்மா ஆர்த்தி நிகழ்வில் கலந்து கொண்டு பிராத்தனை செய்தார் சாரா அர்ஜுன். அதன் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு ஒரு வேண்டுதல் இருந்தது. அதனால் இங்கே வந்து இருக்கிறேன். இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. சிறப்பாக எதையும் நான் கேட்கவில்லை. சொத்து, சுகம். வெற்றி இவை மட்டும் தான் எனது வேண்டுதலாக இருந்தது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !