இரண்டு பாகங்களையும் சேர்த்து 3000 கோடி கடந்த 'துரந்தர்'
இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஹிந்திப் படமான 'தங்கல்' படம் சுமார் 2000 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. தெலுங்குப் படமான 'பாகுபலி 2' சுமார் 1800 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கடந்த மாதம் வெளிவந்த ஹிந்திப் படமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் 1770 கோடி வசூலைக் கடந்துள்ளது. 1680 கோடிக்குப் பிறகு அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 1800 கோடி வசூலைக் கடந்து 'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடித்து 'துரந்தர் 2' இரண்டாம் டத்தைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இருந்தாலும் இரண்டு பாகப் படங்களில் 3000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து புதிய சாதனையை இந்த 'துரந்தர்' படைத்துள்ளது. இந்தியத் திரையுலகத்தில் இரண்டு பாகங்களையும் சேர்த்து அதிக வசூலைக் குவித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.