அப்ரூவராக மாறும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் : வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் சல்மான்கானுடன் இணைந்து நெருக்கமாக சுற்றி வந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர். கடந்த 2022ல் சுகேஷ் என்பவர் 200 கோடி மோசடி வழக்கில் சிக்கினார். அவரிடம் இருந்து கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள் பரிசு பொருட்களை பெற்றதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அவருக்கு அவருடைய சொந்த நாடான பக்ரைனுக்கு செல்வதற்கு கூட நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தான் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்த மனுவை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமாலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். அது மட்டுமல்ல ஜாக்குலின் பெர்னாண்டஸ் வைத்த கோரிக்கையின் பெயரில் அவர் துபாய், ஸ்ரீலங்கா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வரும் ஏப்ரல் 24 முதல் மே 25 வரையிலான ஒரு மாத காலகட்டத்திற்குள் பயணம் செய்யவும் அனுமதி அளித்துள்ளது..