மீண்டும் தாயாகிறார் தீபிகா
ADDED : 4 hours ago
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் கடந்த 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு 'துவா' என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தீபிகா மீண்டும் தாயாக இருப்பதை ரன்வீர் சிங்-தீபிகா தம்பதிகள் சமூகவலைத்தள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து இவர்களரது மகள் 'பிரக்னன்சி கிட்' (கர்ப்ப உறுதி கருவி) உடன் போஸ் கொடுக்கும் போட்டோவை ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.