உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா வாய்ப்பு தேடும் சுயாதீன பாடகி

சினிமா வாய்ப்பு தேடும் சுயாதீன பாடகி

அமெரிக்காவில் வாழும் தமிழர் சிந்து வாசுதேவன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம், பெங்காலி, ராஜஸ்தானி உள்பட 16 மொழிகளில் சுயாதீன பாடல்கள் பாடி பிரபலமானவர். 22 வயதாகும் சிந்து ஏ.ஆர்.ரகுஹ்மானை அமெரிக்காவில் ஹுஸ்டன் நகரில் சந்தித்தார். அப்போது உங்கள் குரல் வளம் நன்றாக இருக்கிறது. தமிழ் படங்களில் பாடலாம் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து சினிமா பாடகியாகும் நோக்கத்துடன் தமிழ்நாட்டு வந்திருக்கிறார் சிந்து. இதுகுறித்து அவர் கூறும்போது “இளம் தலைமுறையினர் அதிக திறமையுடன் இசைத்துறைக்கு வருகின்றனர். அவர்களை இசை அமைப்பாளர்களும், திரைத்துறையினரும் உற்சாகப்படுத்தி வாய்ப்பளிக்க வேண்டும். பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்ரேயா கோஷல் போன்ற பாடகிகள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

ஹூஸ்டனில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தேன். எனது குரல் பொருத்தமாக இருந்தால், தமிழ் படத்தில் பாட வாய்ப்பு தருவார் என்று நம்புகிறேன். இமான், ஷான் ரோல்டன் இசையில் தமிழ் பாடல்களை பாடியிருக்கிறேன். பாடல் வாய்ப்பு கேட்டால் நடிக்கிற வாய்ப்பே அதிகம் வருகிறது. ஆனால் நான் பாடலுக்குதான் அதிக முக்கியத்துவம் தருவேன்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !