மீண்டும் ஒரு அரசியல் நையாண்டி படம்
தேர்தல் நேரத்தில் வெளிவந்து பரபரப்பை கிளப்பிய படம் 'டிஎன் 2026'. உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமய்யா, அருள்தாஸ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.
தற்போது அதே சாயலில் உருவாகி வரும் அரசியல் நையாண்டி படம் 'மக்கள் தலைவா'. இந்த படத்தை பழகிய நாட்கள், மூன்றாம் மனிதன் படங்களை இயக்கிய ராம்தேவ் இயக்குகிறார். ரவிமரியா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் ராதாரவி, இயக்குனர் பேரரசு, கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கார்த்திக் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், துளசி ராயன் இசை அமைக்கிறார். கவிதாலயா சரவணன், சந்திரசேகர், ராம்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தில் பல அரசியல் கட்சிகளை விமர்சிக்கப்பட்டு காட்சிகள் இடம் பெற்றிருப்பதை படத்தின் டிரைலர் உறுதி செய்திருக்கிறது.