உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தொடர் 100 கோடியை இழக்கும் பிரதீப் ரங்கநாதன்

தொடர் 100 கோடியை இழக்கும் பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்களின் டிரெண்டிங் நாயகனாக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். 'லவ் டுடே, டிராகன், டியூட்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்து மூன்று படங்களையும் 100 கோடி வசூல் படங்களாகக் கொடுத்தார். ஹாட்ரிக் 100 கோடி கொடுத்த முதல் நடிகர் என்ற சாதனையையும் படைத்தார்.

அவரது நடிப்பில் அடுத்து வெளியான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் மூலம் மீண்டும் 100 கோடி வசூலைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்காத நிலை வந்துவிட்டது. தற்போது வரை இந்தப் படம் 55 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டதால் இதற்கு மேலும் 100 கோடி வசூல் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. அதனால், தொடர்ந்து 4வது படமாக 100 கோடி கொடுக்கும் வாய்ப்பை அவர் இழக்க நேரிடுகிறது.

அவரது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வராத நிலையில் அவரைத் தேடி பல வாய்ப்புகள் போவதாகச் சொல்கிறார்கள். 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' தந்த அதிர்ச்சியால் அவர் தனது அடுத்த படத் தேர்வில் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. சரியான கதை கிடைக்கவில்லை என்றால் அவரே இயக்கி, நடிக்கவும் செய்யவும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !