த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தின் இசையமைப்பாளர் மாற்றமா?
ADDED : 6 hours ago
தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் முதல் முறையாக நடிகர் வெங்கடேஷ் டகுபதி உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றார். ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார் என அறிவித்திருந்தனர். தற்போது ஒரு சில காரணங்களால் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் வெளியேற, இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.