உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பு நிறைவு

சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பு நிறைவு

எல்ரெட் குமார் தயாரிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்க, சூரி கதை நாயகனாக நடிக்கும் படம் ‛மண்டாடி'. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டு வந்தது. கட்டுமர படகு போட்டி பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் படம் உருவாகி வந்தது. பலமாதங்கள் நடந்த இந்தபடப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் என்பவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவருடன் மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்

மண்டாடி திரைப்படம், மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. “மண்டாடி” என்பது கடல் அலைகள், காற்றின் திசை, நீரோட்டம் போன்றவற்றை ஆழமாக அறிந்து, மீன்பிடித் தொழிலை வழிநடத்தும் நிபுணரை குறிக்கும் சொல் என்பது குறிப்பிடத்தக்கது. சூரி நடித்த படங்களில் இதுதான் மிக அதிக பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 75 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !