உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெருந்தொகைக்கு ஆசைப்பட்டு ஜனநாயகன் படம் திருட்டு : கைதான எடிட்டர் வாக்குமூலம்

பெருந்தொகைக்கு ஆசைப்பட்டு ஜனநாயகன் படம் திருட்டு : கைதான எடிட்டர் வாக்குமூலம்

சென்னை: சகோதரியின் நண்பர் பெருந்தொகை தருவதாக கூறியதால், ஜனநாயன் படத்தை திருடியதாக, கைதான திரைப்பட உதவி எடிட்டர் பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

த.வெ.க., தலைவர் விஜய் நடித்த, ஜனநாயகன் படம் தியேட்டருக்கு வரும் முன்பே சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானது. இது தொடர்பாக, மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, திரைப்பட உதவி எடிட்டர் பிரசாத் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.

போலீசாரிடம் பிரசாத் அளித்துள்ள வாக்குமூலம் : ஜனநாயகன் படம், 'எடிட்டிங்' செய்யப்பட்ட இடத்தில், நானும் நண்பர்களும் வேறொரு படத்திற்கான எடிட்டிங் வேலையில் ஈடுபட்டோம். அங்கு, என் சகோதரியின் நண்பரும், மென்பொருள் பொறியாளருமான ஒருவரும் வேலை பார்த்து வந்தார். அவர், எங்களிடம் பெரும் தொகை தருவதாக ஆசை காட்டினார். குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக வேண்டும் என்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து, ஜனநாயகன் படக் காட்சிகளை திருடி, அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று, எடிட்டிங் செய்து, இணையதளத்தில் வெளியிட்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !