உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தண்டேல் இயக்குனரின் புதிய படத்திற்காக அக்ஷய் குமார் - ராணா கூட்டணி

தண்டேல் இயக்குனரின் புதிய படத்திற்காக அக்ஷய் குமார் - ராணா கூட்டணி

தெலுங்கில் நாகசைதன்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் தண்டேல்.. சந்து மொண்டேட்டி இயக்கினார். கார்த்திகேயா, கார்த்திகேயன் 2 உள்ளிட்ட வெற்றி படங்களையும் கொடுத்த இவர் தற்போது புதிய பீரியட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இதில் ரானா டகுபதி கதாநாயகனாக நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறாராம்.

உஜ்ஜைனியை பின்னணியாகக் கொண்டு உருவாகும் பீரியட் படம் என்றாலும் வரலாற்று படமாக இல்லாமல் சமகால கட்டத்திலும் நிகழும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த கதையை கேட்டதுமே அக்ஷய் குமார் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !