உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயசூர்யா நடிக்கும் மாயன் சாப்டர் 1

ஜெயசூர்யா நடிக்கும் மாயன் சாப்டர் 1

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி மற்றும் நடிகர் விநாயகன் நடிப்பில் களம்காவல் திரைப்படம் வெளியானது. ஜித்தின் கே ஜோஸ் இயக்கினார். இதில் விநாயகன் கதாநாயகனாகவும், மம்முட்டி வில்லனாகவும் நடித்திருந்தனர். மம்முட்டியின் வில்லத்தனமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

அடுத்ததாக மாயன் என்கிற படத்தை இயக்குகிறார் இயக்குனர் ஜித்தின் கே ஜோஸ். இதில் கதாநாயகனாக ஜெயசூர்யா நடிக்கிறார். சமீபத்தில் ஜெயசூர்யா நடிபில் வெளியான ஆடு 3 திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் அவரது அடுத்த பிரம்மாண்ட படமான கத்தனார் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக தான் ஒப்பந்தமாகி இருக்கும் இந்த மாயன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் ஜெயசூர்யா. படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !