உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛கர' படம் தனுஷ் தான் பொருந்தும் : விக்னேஷ் ராஜா

‛கர' படம் தனுஷ் தான் பொருந்தும் : விக்னேஷ் ராஜா

‛போர் தொழில்' பட புகழ் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'கர' படம் இந்தவாரம் ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சராமுடு, கேஎஸ் ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கான புரோமொஷன் நிகழ்ச்சிகளில் விக்னேஷ் ராஜா கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது ஒரு பேட்டியில் கர படம் அமைந்தது குறித்து அவர் கூறியதாவது, போர் தொழில் படத்தை பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் என்னை லியோ படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டினார். அப்போது நடிகர் விஜயை சந்தித்தேன். ஆனால், அவர் போர் தொழில் படத்தை அப்போது பார்க்கவில்லை. அதேபோல் போர் தொழில் படத்தை பார்த்து சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் பாராட்டினார். என்னிடம் கதையும் கேட்டிருந்தனர். ஆனால், என்னிடம் இருந்த கர படத்தின் கதைக்கு தனுஷிற்கு தான் பொருத்தமாக இருக்கும் என்பதை சூர்யா, சிவகார்த்திகேயனிடம் கூறிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !