தமிழில் வெளியாகும் காஜல் அகர்வாலின் இந்திப் படம்
காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ள இந்திப் படம் 'தி இந்தியா ஸ்டோரி'. இதில் ஷ்ரேயாஸ் தல்படே நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை சேட்டன் ஆர்.கே இயக்க, சாகர் பி ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே. இப்படம் வரும் ஜூலை 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜீ ஸ்டூடியோ வெளியிடுகிறது.
படம் பற்றி இயக்குநர் சேட்டன் டிகே கூறியதாவது: இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்த ஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும்.
இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில், 'தி இந்தியா ஸ்டோரி' ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக இருக்கும். 'இந்திய விவசாயத்தில் கலக்கப்படும் விஷம்' என்பதுதான் படத்தின் மையக்கரு. தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.