உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிளப்பில் போதையில் கலாட்டா: இந்தி டிவி நடிகை மீது சரமாரி தாக்குதல்

கிளப்பில் போதையில் கலாட்டா: இந்தி டிவி நடிகை மீது சரமாரி தாக்குதல்


இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ப்ரீத் சிங். ஸ்பிளிட் வில்லா நிகழ்ச்சின் மூலமும் பிரபலமடைந்தார். தற்போது சில தொடர்களில் நடித்து வரும் அவர் சமூக வலைதளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ஏராளமான பின்தொடர்பாளர்களையும் வைத்துள்ளார். ப்ரீத் சிங் அடிப்படையில் ஒரு உடற்பயிற்சி நிபுணரும்கூட, மாடல் அழகியாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் ப்ரீத் சிங் தனது தோழியுடன் மும்பையில் உள்ள ஒரு பிரபலமான இரவு கிளப்பிற்கு சென்றுள்ளார். அதே கிளப்பிற்கு அவரது இன்னொரு தோழி தன் காதலருடன் வந்திருந்தார். எல்லோரும் மது அருந்தியிருக்கிறார்கள். பின்னர் அவர்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணின் காதலன் ப்ரீத்தியை கடுமையாக தாக்கினார். இதில் ப்ரீத்தியின் பல் உடைந்து கண்ணும், கன்னமும் வீங்கியது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் தனது காயம் பட்ட படத்தை வெளியிட்டு தனது பதிவில் மும்பை, பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என்று நான் எப்போதும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அது என்னை இப்படி வரவேற்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. இதை நான் எழுதும்போதே நடுங்கிக்கொண்டிருக்கிறேன், என் கண்கள் வீங்கியுள்ளன, என் முகம் காயமடைந்துள்ளது, என்ன நடந்தது என்பதை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

நான் ஒரு கிளப்பில் என் தோழியுடன் சாதாரணமாக அமர்ந்து நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தேன், அப்போது திடீரென்று ஒரு பெண், நாங்கள் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டோம் என்று கேள்வி எழுப்பி கத்தத் தொடங்கினாள். ஒரு வாய்மொழி வாக்குவாதமாகத் தொடங்கியது, அவளுடைய ஆண் நண்பர் தலையிட்டு எங்களை உடல்ரீதியாகத் தாக்கியபோது, அது விரைவாக ஒரு பயங்கரமான சம்பவமாக மாறியது. நான் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டேன், என் பல் உடைந்து என் முகம் வீங்கிவிட்டது. மக்கள் விசாரித்தபோதுதான் நிலைமை நின்றது. பின்னர் அந்தப் பெண் ஒரு இன்ஃப்ளூயன்சர் என்று எனக்குத் தெரிய வந்தது. என்று எழுதியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !