2062ல் தான் நன்றாக தூங்குவேன் : திரிஷா வெளியிட்ட பதிவு
சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள கருப்பு படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா, மலையாளத்தில் மோகன்லால் உடன் ராம் போன்ற படங்கள் கைவசம் வைத்துள்ளார் திரிஷா. கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களில் சிக்கிக் கொண்டு வரும் திரிஷா, அவ்வப்போது தனக்கு எதிராக வெளியாகும் கருத்துக்களுக்கு கிண்டலாக பதிலும் கொடுத்து வருகிறார்.
இப்படியான நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஒரு மணி நேரம் தூக்கத்தை நாம் இழந்தால் அதை ஈடுகட்ட நான்கு நாட்கள் தூங்க வேண்டும். அந்த கணக்கில் பார்க்கும்போது 2062ல்தான் நான் நன்றாக தூங்குவேன் என்று பதிவிட்டு இருக்கிறார் திரிஷா.
இதுபோன்று தன்னைப்பற்றி வெளியாகும் திருமண வதந்திகள், நடிகர்களுடன் இணைத்து வெளியாகும் கிசுகிசுக்களுக்கும் அவ்வப்போது பதிவு போட்டு வருகிறார் திரிஷா.