உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலிவுட் நடிகருடன் பூஜா ஹெக்டே காதலா?

பாலிவுட் நடிகருடன் பூஜா ஹெக்டே காதலா?

மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்து அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பிறகு தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். பிறகு ரெட்ரோ, கூலி, ஜனநாயகன் போன்ற படங்களில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பாலிவுட் ஊடகங்களில் நடிகர் ரோஹன் வினோத் மெஹரா என்பவரை பூஜா ஹெக்டே காதலிப்பதாகவும், அவருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது. என்றாலும் இந்த காதல் செய்தி குறித்து இதுவரை பூஜா ஹெக்டே எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை. நடிகர் ரோஹன் வினோத் மெஹரா ஹிந்தி படங்கள், வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !