உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுப்பிக்கப்பட்ட 'மூன்றாம் பிறை': மே 1ல் ஓடிடியில் வெளியீடு

புதுப்பிக்கப்பட்ட 'மூன்றாம் பிறை': மே 1ல் ஓடிடியில் வெளியீடு


1982ல் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மூன்றாம் பிறை'. பாலு மகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரித்திருந்தார், இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் அப்போது மிகப்பெரிய ஹிட்டானது. படத்தில் இடம்பெற்ற 'கண்ணே கலைமானே', 'பொன்மேனி உருகுதே', 'பூங்காற்று புதிதானது' போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற இத்திரைப்படம் சிறந்த நடிகர் (கமல்ஹாசன்), சிறந்த ஒளிப்பதிவாளர் (பாலு மகேந்திரா) ஆகிய பிரிவுகளில் தேசிய விருதினை வென்றது. மேலும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை (ஸ்ரீதேவி), சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படம் ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றிருந்தது.

இப்படி பல பெருமைகளை படைத்த இப்படம்44 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரீ ரிலீஸ் ஆகிறது. அதுவும் தியேட்டர்களில் இல்லை ஓடிடியில். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த புதுப்பிக்கப்பட்ட 'மூன்றாம் பிறை' திரைப்படத்தை மே 1ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !