விருஷகர்மாவில் புதையலைத் தேடி அலையும் மனிதராக நாகசைதன்யா
தெலுங்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சம்யுக்தா நடிப்பில் 'விருபாக்ஷா' என்கிற படம் வெளியானது. ஹாரர் திரில்லராக வெளியான இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் தண்டு வர்மா இயக்கியிருந்தார்.. மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்த படத்தை தொடர்ந்து, தற்போது அவர் நாகசைதன்யா நடிப்பில் விருஷகர்மா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் ஒரு சூப்பர் நேச்சுரல் திரில்லராக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாகசைதன்யா இந்த படத்தில் தன்னுடைய பாத்திரம் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இதில் நான் புதையலை தேடிச் செல்லும் ஒரு வேட்டைக்காரனாக அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹாலிவுட்டில் இதுபோல பல படங்களை நான் ஏற்கனவே பார்த்து இருந்தாலும் கூட இந்தியவில் ஒரு சில படங்களில் மட்டுமே இது போன்ற ஒரு ஐடியா முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளது. நிச்சயமாக ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான உணர்வை கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.