உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மொத ராத்திரியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

மொத ராத்திரியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தெலுங்கில் முன்னணி பட நிறுவனமாக திகழும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் குட் பேட் அக்லி, டியூட் படங்களை தயாரித்து இருந்தது. 3வது படமாக மொத ராத்திரியை தயாரிக்கிறது. ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் 'சிறை' மற்றும் 'யூத்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பது தான் 'மொத ராத்திரி' படத்தின் கதை. 'மண்டேலா', 'மாவீரன்' புகழ் பரத் சங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் பார்வையை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். இவர் அடுத்து இயக்கும் படத்தை மைத்ரி நிறுவனம் தயாரிக்கிறது. அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. அதனால், இந்த படத்தின் முதல் பார்வையை அவர் வெளியிட்டுள்ளார்.

புஷ்பா, குட் பேட் அக்லி போன்ற பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த நிறுவனம், இப்போது கதைக்கு முக்கியத்துவமுள்ள சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இந்த நிறுவனம் அயலான் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !