உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரேநாளில் இத்தனை படங்களின் அப்டேட்

ஒரேநாளில் இத்தனை படங்களின் அப்டேட்

தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு இதுவரையில் வசூலில் பெரிதாக சாதிக்காமல் மிகச் சுமாராக போய்க் கொண்டிருக்கிறது. அதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் 'கர' படம் கூட எதிர்பார்த்த அளவு இல்லை என்பதுதான் ரிசல்ட் ஆக உள்ளது. இருந்தாலும் இனி வரும் மாதங்களில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில முக்கியமான நாட்களில் புதிய படங்கள் பற்றிய அப்டேட் வருவது வழக்கம். அது நேற்று தொழிலாளர் தினமான மே 1ம் தேதியிலும் சில பல படங்களின் அப்டேட் வந்தது ஆச்சரியம்தான்.

நேற்று ரியோ ராஜ் நடிக்கும் 'பிரவுன் மணி' படத்தின் டைட்டில் அறிவிப்பு, பரத், சான்வீ மேக்னா நடிக்கும் 'காவியக் காதல்' படத்தின் டைட்டில் அறிவிப்பு, அமீர் நடித்துள்ள 'மாய வலை' படத்தின் சென்சார் அறிவிப்பு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 3வது தமிழ்ப் படத் தயாரிப்பான 'மொத ராத்திரி' படத்தின் அறிவிப்பு, விஜய் ஆண்டனி நடிக்கும் 'நூறு சாமி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு, பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்த படமான 'பரிமளா அண்ட் கோ' படத்தின் டைட்டில் அறிவிப்பு, ஜெய் நடிக்கும் 'சட்டென்று மாறுது வானிலை' படத்தின் டிரைலர் வெளியீடு, கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் 'சத்தியவான் சாவித்திரி' படத்தின் டைட்டில் அறிவிப்பு உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !