உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: விஜயகாந்திற்காக கதை எழுதிய இப்ராஹிம் ராவுத்தர்

பிளாஷ்பேக்: விஜயகாந்திற்காக கதை எழுதிய இப்ராஹிம் ராவுத்தர்


நட்புக்கு இலக்கணமாக விஜயகாந்த்- அ.செ.இப்ராஹிம் ராவுத்தரை சொல்வார்கள். இருவருமே பால்ய கால நண்பர்கள். இருவருமே பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள். விஜயகாந்த் நடிப்பு ஆசையில் சென்னை வந்து கஷ்டப்பட்ட காலத்தில் அவருக்காகவே தயாரிப்பாளராக மாறியவர் இப்ராஹிம் ராவுத்தர்.

ராவுத்தர் பிலிம்ஸ், தமிழன்னை சினி கிரியேஷன், ஐ.வி கிரியேஷன் என 3 தயாரிப்பு நிறுவனங்களை தொடங்கி விஜயகாந்தை வைத்து மட்டும் 17 படங்கள் தயாரித்தார். இதுதவிர பார்த்திபன், அருண் பாண்டியன், பாண்டியனை வைத்து சில படங்களையும் தயாரித்தார்.

இப்ராஹிம் ராவுத்தருக்கு தான் ஒரு கதை எழுதி அந்த கதையில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அப்படி அவர் எழுதிய கதைதான். 'பாட்டுக்கு ஒரு தலைவன்'. ஒரு எம்.எல்.ஏ மகளுக்கும், நடுத்தர குடும்பத்து இளைஞனுக்குமான காதலும், பிரச்சினைகளும்தான் கதை.

இதில் விஜயகாந்த், ஷோபனா, நம்பியார், கே.ஆர்.விஜயா, லிவிங்ஸ்டன், எஸ்.எஸ்.சந்திரன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். லியாகத் அலிகான் இயக்கி இருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட், படம் ஹிட்டாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !