உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம்

‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம்

எப்.ஐ.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு மனு ஆனந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‛மிஸ்டர் எக்ஸ்'. ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், ரைசா வில்சன், அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடித்தனர். ஸ்பை திரில்லராக ஆக் ஷன் பின்னணியில் உருவான இப்படம் தோல்வியை தழுவியது. மனு ஆனந்த் தற்போது நடிகர் விக்ரமிற்கு ஒரு கதையை கூறியுள்ளார். மூன்று பாகங்கள் கொண்ட இந்த படத்தின் கதை விக்ரமிற்கு பிடித்துள்ளதால் முழு திரைக்கதையையும் முடித்து வரும்படி கூறியுள்ளார். அதேசமயம் மூன்று பாகங்கள் என்பதால் அதற்கான பட்ஜெட் செலவும் அதிகம். அதற்கேற்ற தயாரிப்பாளரரை தேடி வருகின்றனர். எல்லாம் சரியாக அமைந்தால் இந்த கூட்டணியில் படம் வர வாய்ப்புள்ளது. தற்போது விக்ரம் ஏற்கனவே தன்னை வைத்து இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !