உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் விளையாட்டு படத்தில் சிவகார்த்திகேயன், தமிழரசன் பச்சமுத்து

மீண்டும் விளையாட்டு படத்தில் சிவகார்த்திகேயன், தமிழரசன் பச்சமுத்து

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ‛சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். மதுரை பின்னணியில் கிராமத்து தெய்வங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதையடுத்து ‛பார்க்கிங்' பட புகழ் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க போகிறார். இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு ‛லப்பர் பந்து' பட புகழ் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். விளையாட்டு பின்னணியில் இப்படம் உருவாகிறது.

ஏற்கனவே ‛லப்பர் பந்து' படமும் விளையாட்டை பின்னணியாக வைத்து தான் உருவானது. அதேப்போல் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ‛கனா' என்ற விளையாட்டை பின்னணியாக கொண்ட படத்தில் நடித்தார். இப்போது இவர்கள் இணைவதன் மூலம் மீண்டும் ஒரு விளையாட்டு பின்னணியில் படம் உருவாக உள்ளது. இதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். தற்போது தனுஷின் 56வது பட வேலைகளில் பிஸியாக உள்ள தமிழரசன் அதை முடித்ததும் சிவகார்த்திகேயன் படத்திற்கு வர உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !