உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன விஜய் ஆதரவு சினிமா பிரபலங்கள்

அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன விஜய் ஆதரவு சினிமா பிரபலங்கள்

தமிழக அரசியல் களம் மீண்டும் சினிமா நடிகரான விஜய் நோக்கி மாறியிருக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போதே பல சினிமா நடிகர்கள், நடிகைகள் இதர பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால் விஜய் முதல்வராக பதவியேற்பது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று மாலை கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகியவை விஜய்க்கு ஆதரவு அளிக்க முன் வந்ததாக செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து அவரும் மூன்றாவது முறையாக கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

உடனடியாக விஜய் ஆதரவு சினிமா நடிகர்கள், நடிகைகள், சில இயக்குனர்கள் உடனே 'முதல்வர் விஜய், சிஎம் விஜய்' என வாழ்த்துகளைப் பதிவிட ஆரம்பித்தனர். இன்று காலை அவர் பதவியேற்பார் என்றும் டிவி சேனல்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

ஆனால், விசிக ஆதரவு கடிதம் தராத காரணத்தால் பெரும்பான்மை இல்லாத நிலை வந்தது. எனவே, விஜய் இன்று பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவசரப்பட்டு வாழ்த்துகளைச் சொன்னவர்கள் தற்போது அமைதி காத்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !