கவர்னர் சந்திப்பில் 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் : விஜய் நோக்கி எழும் கேள்வி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், நேற்று மீண்டும் கவர்னரை சந்தித்தார். அப்போது 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரான கர்நாடகாவைச் சேர்ந்த கேவிஎன் வெங்கட் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபரான விஷ்ணு ரெட்டி ஆகியோருடன் சந்தித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'ஜனநாயகன்' படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு சம்பந்தமில்லாத, இரண்டு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் கவர்னரை சந்தித்தது ஏன் என விஜய்யை நோக்கி சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தங்களது கட்சி ஆட்சியமைக்க எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களைக் கொடுப்பதற்காக நேற்று கவர்னரை சந்தித்துள்ளார் விஜய். மிக முக்கியமான சந்திப்பு இது. அப்படியிருக்கும் போது மாநிலத்திற்கோ, அவரது கட்சிக்கோ சம்பந்தமில்லாதவர்களை ஏன் விஜய் தன்னுடன் அழைத்துச் சென்றார் என பலரும் கேட்டு வருகிறார்கள்.
ஆட்சியமைப்பதற்கு முன்பாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் விஜய். ஆரம்பமே இப்படியா என அரசியல் பார்வையாளர்களும் கேட்கிறார்கள்.