சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள்
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்த ‛29' படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. வசூல் ரீதியாக படம் தோல்வி அடைந்துள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் படத்தை ஆஹோ ஓஹோவென புகழ்ந்தனர். ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கோ பிடிக்கவில்லை. இப்படி மிஸ்டர் எக்ஸ், கர, எல்ஐகே என பல படங்களுக்கு நடந்தள்ளது. ஆனால், அந்த தரப்போ, சிறப்பு காட்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கிறார்கள். முன்னமே படத்தை போட்டு காண்பித்துவிட்டு, வெளியே வந்து கேமராவின் பேட்டி கொடுக்கிறார்கள். அதை பட விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் படத்தை புகழ்ந்து தானே ஆக வேண்டும் என்று சிரிக்கிறார்கள். அதனால், இனி சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழும் சினிமாகாரர்கள் பேச்சை நம்பக்கூடாது. படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு பேட்டி கொடுப்பவர்களையும் நம்ப கூடாது. அப்படி பேசுபவர்கள் பலர் பணத்துக்காக பேசுகிறார்கள். படக்குழுவினரே அவர்களை தியேட்டர்களுக்குள் அனுப்பி குறிப்பிட்ட யு டியூப்பில் பேச வைக்கிறார்கள். அவர்களும் படத்தை புகழ்கிறார்கள். இது ஒரு விளம்பரம் போல பேக்கேஜ் ஆக பணம் கொடுத்து செய்யப்படுகிறது. ஆகவே, நாம் படம் பார்த்துவிட்டு அல்லது நண்பர்கள் படம் பார்த்துவிட்டு சொல்லும் தகவல்கள், பொதுவாக இணையத்தில் பரவும் தகவல்களை நம்பியே படம் பார்ப்பதை முடிவு செய்ய வேண்டும் என ரசிகர்கள் தெளிவு மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.