உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2'

மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2'


ரன்வீர் சிங் நடிப்பில் ஹிந்தியில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் 'துரந்தர்'. ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இப்படம் படத்தில் அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். 1500 கோடிக்கு மேல் வசூலித்தது. அதையடுத்து துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மார்ச் 19ம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு முதல் பாகத்தை விடவும் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதுவரை 1800 கோடி வசூலித்துள்ள இப்படம் 2000 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த துரந்தர்-2 படம் வருகிற மே 14ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், துரந்தர் படம் வருகிற ஜூலை 10ம் தேதி ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !