உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு'

பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு'


சினிமாவில் கோர்ட் டிராமா என்ற ஒரு வகை உண்டு. அதாவது நீதிமன்ற பின்னணியிலான கதை. சிவாஜி நடித்த 'கௌரவம்', மோகன் நடித்த 'விதி', அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' போன்றவை இந்த வகையிலான படங்கள். இந்த ஜார்னரில் 1959ம் ஆண்டு வெளிவந்த படம் 'நல்ல தீர்ப்பு'.

டி.பிரகாஷ்ராவ் இயக்கிய இந்த படத்தில் ஜெமினி கணேசன், ஜமுனா, எம். ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், சித்தூர் வி.நாகையா, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார். ஒரு வங்கி ஊழியர் செய்யாத கொலைக்காக சிறைக்கு செல்கிறார். அவரது மனைவி தன் மகனை ஒரு வழக்கறிஞராக வளர்த்து ஆளாக்கி மீண்டும் அதே வழக்கை நடத்தி தன் கணவனை விடுவிப்பதுதான் கதை. இந்த வழக்கு முன்பு நடந்போது நீதிமன்றத்தில் நடந்த முறைகேடுகளை துணிச்சலாக சொன்னது. நீதிமன்ற காட்சிகள் நாடகத்தன்மையோடு இல்லாமல் யதார்த்தமாக இருந்தது.

இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது நீதிமன்ற காட்சிகளில் நீதிமன்றத்திற்கு எதிரான வசனங்களை நீக்கியது. பல காட்சிகளை வெட்டியது. இதனால் கதையின் போக்கு மக்களுக்கு புரியாது என்பதால் சில விஷயங்கள் வாய்ஸ் ஓவரில் சொல்லப்பட்டு படம் வெளியானது. படமும் பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Mani Iyer, Dubai
2026-05-13 15:57:48

பின்னாளில் இதே கதையை "சட்டத்தின் திறப்பு விழா" என்று மீண்டும் எடுத்தனர்