விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு
'களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஓவியா. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' சீசன் 1ல் கலந்து கொண்டு பரபரப்பாகப் பேசப்பட்டார். அவருடைய பங்கேற்பைப் பார்த்து 'ஓவியா ஆர்மி' என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தார்.
நடிகை ஓவியா நேற்று அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் முன்னாள் நடிகரும், இந்நாள் முதல்வருமான விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் குறித்து அதிரடிப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “ரூட் மாபியா அம்பலப்படுத்தபட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் நடத்தி வரும் நிறுவனத்தின் பெயர் ரூட். விஜய், கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே, சமந்தா, கல்யாணி பிரியதர்ஷன், துஷாரா விஜயன், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, வினோத், நடிகர்கள் கதிர், அர்ஜுன் தாஸ் ஆகியோர் இந்த ரூட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் முக்கிய சினிமா பிரபலங்கள்.
இதற்கு முன்பு நடிகை பிரியங்கா மோகன் இந்நிறுவனத்தின் கீழிருந்து விலகிய பிறகு அவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக 'டிரோல்' செய்யப்பட்டதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
இந்நிலையில் நடிகை ஓவியா தற்போது இந்நிறுவனம் பற்றி வெளிப்படையாகப் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம்தான் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதைக் கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அவர்களது கட்டுப்பாட்டில் பல இன்புளூயன்சர்கள், யு டியூப் பிரபலங்கள் இருக்கிறார்களாம்.
.