உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ்

காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ்

ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்திற்கு பிறகு, தி இந்தியா ஸ்டோரி மற்றும் ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இதில், தி இந்தியா ஸ்டோரி படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரேயாஸ் தல்படேகர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் டீசர் வெளியாக உள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் அபாயம் குறித்த கதையில் உருவாகி இருக்கிறது. சேட்டன் டி.கே என்பவர் இயக்கி உள்ள இப்படம் வருகிற ஜூலை 24 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இந்தியன்-3 திரைக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஹிந்தியில் அவர் நடித்துள்ள தி இந்தியா ஸ்டோரி படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !