உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தி 49வது பிறந்தநாளில் வெளியான 'சர்தார்-2, மார்ஷல்' பட போஸ்டர்கள்!

கார்த்தி 49வது பிறந்தநாளில் வெளியான 'சர்தார்-2, மார்ஷல்' பட போஸ்டர்கள்!


‛சர்தார்' படத்தில் இணைந்த கார்த்தி - பி.எஸ்.மித்ரன் கூட்டணி தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் கார்த்தியுடன எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த சர்தார் -2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நேற்று கார்த்தின் 49வது பிறந்த நாளையொட்டி ஒரு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில், கோவில் விழாவில் கழுத்தில் மாலையுடன் நடனமாடி கொண்டிருக்கிறார் கார்த்தி.

அதேபோல் ‛டானாக்காரன்' தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 29வது படமான ‛மார்ஷல்' படத்தின் போஸ்டரையும் அப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !