உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சக்தி வாய்ந்த வேடம்: ‛பெத்தி' படம் குறித்து சிவராஜ் குமார் தகவல்

சக்தி வாய்ந்த வேடம்: ‛பெத்தி' படம் குறித்து சிவராஜ் குமார் தகவல்


தற்போது தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் ‛பெத்தி'. ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், பெத்தி படம் குறிக்கும் சிவராஜ் குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛இந்த படத்தில் கவுர் நாயுடு என்ற ஒரு சக்தி வாய்ந்த வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். நான் ஒரு முக்கிய பகுதியாக இருப்பேன். என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குனர் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். எனது ரோல் இப்படத்தில் ஒரு பயிற்சியாளரின் பாத்திரத்தை போன்றது. கவுர் நாயுடுக்கும், பெத்திக்கும் இடையிலான பந்தம் மிகவும் சுவாரஸ்யமாக உணர்வு பூர்வமாக இருக்கும்'' என்று கூறியிருக்கும் சிவராஜ்குமார், ‛‛இந்த படத்திற்காக ராம்சரண் தேசிய விருது பெறுவார் என்று உறுதியாக நம்புகிறேன். அவரது உடல் தோற்ற மாற்றமும், நடிப்பும் அசாதாரணமானது. நம்ப முடியாத அளவுக்கு கடினமாக உழைத்து இந்த படத்திற்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார். இந்த பெத்தி படம் ஜூன் 4 ம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !