திருநங்கையாக நடிக்கும் ரவி தேஜா
ADDED : 2 hours ago
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி தேஜா. கடந்த பல வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. தற்போது 'இருமுடி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சபரிமலை ஆன்மிக பின்னணியில் இந்த கதை உருவாகி வருகிறது. இதையடுத்து தெலுங்கில் இளம் இயக்குனரான ஹசித் கோலி என்பவர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் ரவி தேஜா முழு படத்திலும் திருநங்கை வேடத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது தெலுங்கு சினிமாவில் நடக்கும் அதிசயமான விஷயம் என்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் என கூறப்படுகிறது.