உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானி தயாரிப்பில் ருக்மணி வசந்த்

நானி தயாரிப்பில் ருக்மணி வசந்த்

நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும், ஒரு தயாரிப்பாளர் ஆக நானி தனது வால் போஸ்டர் சினிமா நிறுவனத்தின் மூலம் ஹிட் படத்தின் மூன்று பாகங்கள் மற்றும் கோர்ட் போன்ற தரமான படங்களை தயாரித்தவர். தற்போது நானி தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தை தண்டோரா படத்தை இயக்கிய முரளிகாந்த் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் இப்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிற ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளார். இன்னும் ருக்மணி வசந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும் அவர் கதையை கேட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !