உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'துருவ நட்சத்திரம்' படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

'துருவ நட்சத்திரம்' படத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி


கவுதம் மேனன் இயக்கம், தயாரிப்பில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், டிடி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2017-18லேயே வெளியாக வேண்டிய படம் கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் ரிலீஸில் தாமதமானது. பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, கோர்ட், கேஸ் என சிக்கலில் இப்படம் தவித்தது.

இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'விக்ரமின் ‛துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிடலாம். ஒருவேளை ஜூன் 15க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கால அவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம்' என்றும் நீதிபதி தெரிவித்து, விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, புண்ணியமூர்த்தி, பிரேம்குமார் ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், திலகவதி ஆகியோர் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை ஜூலை 15ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இந்த மனுவுக்கு வருகிற 17ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !