கடந்த வாரம் ரிலீஸான 8 படங்களின் ரிசல்ட் என்ன
கடந்த வாரம் குஷ்பு மகள் அனந்திகா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்ற, அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், வினோத், சம்யுக்தா, ரேஷ்மா நடித்த டபுள் ஆக்குபன்சி, மீரா கதிரவனின் ஹபீபி, பிக்பாஸ் ஜனனி நடித்த நிழல், ஒய்.ஜி.மகேந்திரனின் சாருகேசி, சேத்தன் சீனு நடித்த வள்ளுவன், தி.கிட்டு இயக்கத்தில் இசக்கிகார்வண்ணன், அம்மு அபிராமி நடித்த ஆட்டி மற்றும் கலையரசன், விதார்த் நடித்த மூன்றாவது கண், மற்றும் பசங்க பாண்டி நடித்த வருகைபதிவேடு ஆகிய 8 படங்கள் வெளியாகின.
இதில் எந்த படமும் ஹிட்டாகவில்லை. வசூலிலும் பெரிய அடி. குறிப்பாக, டபுள் ஆக்குபன்சி படம் தவிர மற்ற படங்கள் வசூலில் படு தோல்வி. சில படங்கள் மறுநாளே பல தியேட்டர்களில் இருந்து துாக்கப்பட்டுவிட்டன என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் தமிழில் வெளியான படங்களில் சூர்யா நடித்த கருப்பு, அர்ஜூன் அபிராமி நடித்த பிளாஸ்ட் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மோகன்லால் நடித்த திரிஷ்யம் 3 கூட தமிழகத்தில் ஓரளவு ஓடியது.
இந்த சூழலில் இந்த மாதம் சசி இயக்கத்தில் விஜய்ஆண்டனி, ஸ்வாசிகா நடித்த நுாறுசாமி படத்துக்கு ஓரளவு வரவேற்பு இருக்கிறது. அந்த படம் தவிர அங்கீகாரம், அனந்தன்காடு, பிராமிஸ், அந்தரன், ஹார்ட்டின் உட்பட பல சின்ன படங்களும் வெளியாக உள்ளன. மே மாதம் அளவுக்கு ஜூன் மாத வசூல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.