உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சத்தியவான் சாவித்ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சத்தியவான் சாவித்ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு

மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வக்கீலாக நடிக்கும் படம் சத்தியவான் சாவித்ரி. பிரவீன் எஸ்.விஜய் இயக்கிய இந்த படம் ஜூலை 24ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருவருமே வக்கீல்களாக நடிக்கிறரா்கள். கோர்ட் ரூம் டிராமா என்றாலும், படத்தில் திரில்லரும் இருக்கிறதாம். தனது சீனியரான மிஷ்கின் தடம் மாறும்போது, ஜூனியரான கீர்த்தி சுரேஷ் அவருக்காக வாதாடுகிறார். அப்போது என்ன நடக்கிறது. அவர் வாழ்வில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என்பது கதை கடந்த சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் ஓடவில்லை. மிஷ்கின் இயக்கிய படங்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில் இந்த படத்தை இருவரும் நம்பியிருக்கிறார்கள். இதில் கீர்த்தி சுரேஷ் ஜோடி உண்டா? என்பதிலும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !