உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐஸ்வர்ய லட்சுமி கேரக்டரில் நடிக்க இருந்தவர் அனுஷ்காவா?

ஐஸ்வர்ய லட்சுமி கேரக்டரில் நடிக்க இருந்தவர் அனுஷ்காவா?

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடித்த கட்டா குஸ்தி 2 படம், ஜூலை 3ல் ரிலீஸ் ஆகிறது. அப்போது இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் அனுஷ்கா. ஆனால், அவரால் நடிக்க முடியவில்லை. பின்னர் பல நடிகைகளிடம் பேசினோம். அவர்கள் சம்பளம் அதிகம் கேட்டனர். சிலர் சண்டை பயற்சிக்கு வர பயந்தனர். கடைசியில் அந்த வாய்ப்பு ஐஸ்வர்ய லட்சுமியிடம் போனது. அவர் சிறப்பாக நடித்தார். இரண்டாம் பாகத்திலும் கலக்கியிருக்கிறார். 3ம் பாகமும் வர வாய்ப்பு என்றார்.

படம் குறித்து ஐஸ்வர்ய லட்சுமி பேசுகையில், 'எனக்கு நல்ல கேரக்டர் வருவது மகிழ்ச்சி. என் படங்களுக்கு அதிக பிஸினஸ் வந்தால், என் படங்களுக்கு அதிக டிக்கெட் விற்பனை நடந்தால் நான் சம்பள உயர்வு குறித்து பேசலாம்'' என்றார்.

முதல் பாகத்தில் இல்லாத ரம்யா கிருஷ்ணனும், யோகிபாபுவும் 2வது பாகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கேரக்டர் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளதாம். பட ரிலீசுக்கு முன்பே கட்டா குஸ்தி 2 படத்தின் விற்பனை லாபகரமாக முடிந்துள்ளது. ஓடிடி, சாட்டிலைட்டும் விற்கப்பட்டுள்ளதாம். ரம்யா கிருஷ்ணன் விளையாட்டு சம்பந்தப்பட்ட முக்கிய வேடத்தில் வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !