உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் மீண்டும் நடிக்க நல்ல கதைகளை தேடுகிறேன்: சமந்தா

தமிழில் மீண்டும் நடிக்க நல்ல கதைகளை தேடுகிறேன்: சமந்தா


நடிகை சமந்தா நடித்த 'மா இண்டி பங்காரம்' படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியாகிறது. சென்னையில் நடந்த விழாவில் சமந்தா பேசியதாவது: சென்னையில் பழைய நண்பர்களை பார்த்ததில் மகிழ்ச்சி. இந்த படத்தின் தயாரிப்பாளர் நான் தான். என்னுடைய தயாரிப்பு நிறுவனம் பெண் கதாபாத்திரங்களை முதன்மை படுத்திய படங்களை தயாரிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறோம். அதன்படி இந்த படத்திற்கு சாய் பல்லவியை முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம். அவர் கால்ஷீட் பிஸியால் நோ சொன்னதும் படத்தில் இன்னும் கொஞ்சம் ஆக்ஷன் காட்சிகளை வைத்து நான் நடிக்க முடிவு செய்தேன். என்னை பொறுத்தவரையில் நடன காட்சிகளைவிட ஆக்சன் காட்சிகள் எளிதாக உள்ளது.

தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு தேடி வருகிறேன். இந்த படம் மாதிரி நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன். தயாரிப்பாளர் பொறுப்பை விட நடிகர் வாழ்க்கை குஷி தான். இந்த கடைசி ஐந்து நாட்களாக ஒரு படம் தயாரிப்பதில் இருக்கும் கஷ்டத்தை புரிந்து கொண்டேன். தமிழ்நாடு என்னுடைய வீடு; கண்டிப்பாக உங்களை நான் பெருமைப்படுத்துவேன்.

தமிழில் மீண்டும் நடிக்க நல்ல கதைகளை தேடி வருகிறேன். நல்ல கதாபாத்திரத்தைக் கொடுக்க இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் 'நான் யார் தெரியுமா' என்ற மாஸ் டயலாக் உள்ளது. அந்த பில்டப் டயலாக் பேச கஷ்டப்பட்டேன். அது அதிக டேக் வாங்கியது. அந்த டயலாக்கை பேச வெக்கமாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.


பின்னர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள முதல்வர் விஜயின் அலுவலகம் சென்ற சமந்தா, விஜயை சந்தித்து வாழ்த்தினார். 'மெர்சல், தெறி, கத்தி' ஆகிய படங்களில் விஜயுடன் சமந்தா நடித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-06-17 21:06:46

தெலுகு தேசத்தில் இருந்து தொரத்தி விட்டார்களா