உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026, ஜூனில் இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்

2026, ஜூனில் இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்

2026ம் ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதத்தின் கடைசி வாரமான இந்த வாரத்தில் ஜூன் 25 மற்றும் ஜூன் 26 ஆகிய இரண்டு தேதிகளில் படங்கள் வெளியாகின்றன. ஜூன் 26ம் தேதி மொகரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால் இந்த வாரம் வெளியாகும் படங்களுக்கு மூன்று நாட்களுக்கு நல்ல வசூல் இருக்க வாய்ப்புள்ளது. அதை எந்தப் படம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறதோ ?.

ஜூன் 25ம் தேதியன்று, “அந்தரன், அனந்தன் காடு” ஆகிய திரைப்படங்களும், ஜூன் 26ம் தேதியன்று 'அங்கீகாரம், கான்சிட்டி, ப்ராமிஸ்,' ஆகிய திரைப்படங்களும் வெளியாகின்றன. இவற்றில் 'அனந்தன் காடு' படத்தின் மைய மொழி மலையாளம் தான். ஆனால், படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் தமிழிலும் பேசுவதால் இப்படத்திற்கு தமிழ் என்றும் தணிக்கை சான்றிதழ் வாங்கியுள்ளார்களாம்.

கடந்த வாரம் வெளியான படங்கள் தியேட்டர் வட்டாரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள். இந்த வாரம் வெளியாகும் படங்களாவது அவர்களுக்கு திருப்தியைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !